Monday, September 19, 2005

ஜேர்மானிய தேர்தல்

ஜேர்மானிய தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கெலா மெர்கெல் ஐ தலைவியாக கொண்ட ஜேர்மனியின் பழமைவாத கிருத்துவ ஜனநாயகக் கட்சி - Christian Democratic Union (CDU) மூன்று ஆசனங்களால் முதலிடத்தில் வந்துள்ளார், இந்த ஆசனங்களுக்கும் ஆட்சியமைப்பதற்கு தேவையான மெஜாரிட்டி எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளமையால், ஜேர்மனியில் ஒரு அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தோன்றியுள்ளது.
அங்கெலா மெர்கெல் (Angela Merkel)

அங்கெலா மெர்கெல் மற்றும் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder) வெளியிட்டுள்ள கருத்துக்களின் படி இருவரும் ஆட்சியமைக்க முயற்சிப்பது தெளிவாகியுள்ளது. இந்த போட்டியில் அங்கெலா வென்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் அவர் ஜேர்மனியின் முதல் பெண் சான்சிலராக (chancellor) வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder)

தேர்தல் வெற்றியை அங்கெலா உரிமை கோரிவரும் நிலையில், எதிர்தரப்பு ஷ்ரோடர் அவர்களோ வாக்காளர்கள் நாட்டை வழிநடத்துவதற்கான ஆணையை அங்கெலாவுக்கு வழங்க மறுத்துவிட்டார்கள் என வாதிட்டு வருகின்றார். இந்த குழப்பமான அரசியல் நிலைமையில் சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நீடிக்கலாம். இந்நிலையில் ஜேர்மானிய பாராளுமன்றத்தினால் முன்று தடவைக்குள் சான்சிலரை தேர்ந்தெடுக்க முடியாமல் போனால், ஜனாதிபதி Horst Koehler அவர்களால் சிறிய பெரும்பான்மையுடன் உள்ள கட்சியை மைனாரிட்டி அரசமைக்க அழைக்கலாம் என்று AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுதான் தற்போதைய ஜேர்மானிய நிலவரம், இனி யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த செய்திகள் BBC, CNN மற்றும் AP நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டவை.

ஜேர்மனியில் வசிக்கும் வலைப்பூ நண்பர்கள் இந்த தேர்தல் குறித்து தமக்கு தெரிந்த தகவல்களை அறிய தாருங்களேன். அங்கு எதிர்பார்க்கப்படுவது போல அரசியல் தலைமை மாற்றம் ற்பட்டால் அது அங்குள்ள தமிழர்களின் வாழ்வியல் மற்றும் அரசியில் நிலைமைகளில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 21, 2005

லண்டனில் மீண்டும் குண்டு வெடிப்பு

லண்டனில் மீண்டும் நான்கு சிறிய குண்டு வெடிப்புக்கள் அல்லது குண்டு வெடிப்பு முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. மூன்று பாதாள ரயில் நிலையங்களிலும் ஒரு பஸ்சிலும் நடைபெற்ற இந்த அசம்பாவிதங்களில் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர லண்டன் யூனிவேர்சிட்டி வைத்தியசாலையிலும் சிறிய அசம்பாவிதம் ஒன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிசார் உட்சென்றிருக்கின்றனர். இது குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் - map by BBC

Warren Street, Shepherd's Bush, Oval பாதாள ரயில் நிலையங்களிலும் லண்டனின் நகரினூடு செல்லும் 26ம் இலக்க இரட்டை தட்டு பஸ்சின் மேற்பகுதியில் நடந்த இந்த சம்பவங்களை தொடர்ந்து பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்றதை குண்டு வெடிப்பு என்று கூறுவதை விட குண்டை வெடிக்க வைக்கும் detonators வெடிப்பு என்று கூறலாம்.

அவுஸ்ரேலிய பிரதமருடன் கலந்துரையாடலில் இருந்த பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் சற்று முன்பு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றி கொண்டிருக்கின்றார். அவர் இது மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க ஏற்படுத்தப்படும் முயற்சிகள் என்றும் மக்களை அமைதி காக்குமாறூம் கேட்டு கொண்டுள்ளார்.

இதுவரை இருவர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலதிக செய்திகள் http://news.bbc.co.uk/1/hi/uk/4703777.stm

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 07, 2005

லண்டன் அதிர்ந்தது !

காலையின் தொலைபேசியில் அழைத்து லண்டனில் குண்டு வெடித்ததாக நண்பன் சொன்னபோது ஒரு கணம் அதை நம்பமுடியவில்லை. இவ்வளவிற்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் நான் இருந்த இடத்திற்கும் அதிக தூரமில்லை என்ன ஒரு அரை மணி நேர பயணம் அவ்வளவு தான். அதன் பின்பு நண்பர்கள் உறவினர்களை உடனடியாக தொடர்பு கொள்ள முயன்றபோதும் மொபைல் தொலைபேசிகள் அளவுக்கு மீறிய பாவனை காரணமாக உடன் வேலை செய்யவில்லை. இதற்கிடையில் உலகெங்கும் சிதறி கிடைக்கும் உறவுகளிடம் இருந்து நலமா நலமா என்று கேட்டு தொலைபேசி அழைப்புக்கள். அதன் பின்பு ஒரு வழியாக நண்பர் உறவினர்களை SMS மூலம் தொடர்புகொள்ள முடிந்தது. சென்றல் லண்டன் பகுதிக்கு அலுவலகங்களிற்கு சென்ற நண்பர்கள் பலர் அங்கு சிக்கி கொண்டார்கள். தற்போது அந்த பகுதியில் Tube புகையிர சேவை மற்றும் பஸ் ஏதும் இல்லை அதனால் அவர்கள் வீடுதிரும்ப முடியாமல் தவிர்க்கிறார்கள். நான் அவர்களை அழைத்து வர முயற்சித்த போதிலும் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் செல்ல பொலிசார் அனுமதிக்கவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடுகள் பொலிசார் செய்யும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை :(

இந்த குண்டு வெடிப்பு குறித்த பிபிசி செய்தி ......

லண்டன் நகரில் தொடர் குண்டு வெடிப்புகள், குறைந்தது பத்து பேர் பலி


லண்டன் நகரில் குண்டு வெடிப்புக்குள்ளான பஸ் - photo by BBC

லண்டன் நகரில் இன்று வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் நிறைந்த காலை நேரத்தில் ஏழு வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மத்திய லண்டன் பகுதியின் வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் காரணமாக லண்டன் நகர போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. அலுவலகங்களுக்கு வருவோர் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர்.

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் , ஜி.8 செல்வந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடந்து கொண்டிருந்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்தன. மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அவசரமாக லண்டன் திரும்புவதாக அறிவித்தார். மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.

------------------------------------------------------------------------------------------------


குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் - map by BBC


Kings Cross இல் இருந்து ரயில் பாதையூடாக மீட்கப்படும் மக்கள் - photo by Alexander Chadwick/BBC

தற்போது வெளி வந்துள்ள செய்திகளின்படி 30க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். இது கூட மிக குறைவான எண்ணிக்கையே இதை விட உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம். லண்டனின் ஒரு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. தொடர் குண்டு வெடிப்புக்களை தவிர்க்க பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகலை மேற்கொண்டு வருகின்றார்கள். லண்டனுக்கு வெளியே உள்ள சில புகையிரத நிலையங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடபட்டுள்ளது. இன்று கழிவு பொருட்களை (Bin bags) கழிவகற்றும் ஊழியர்கள் அகற்றமாட்டார்கள் என்றும் அதனால் அவற்றை வீடுகளுக்கு வெளியே வைக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் மரணமடைந்தவர்கள் காயமடைந்தவர்கள் குறித்த விபரத்தை 0870 1566344 என்ற தொலைபேசி இலக்கத்தில் பெற்று கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு
http://news.bbc.co.uk/1/hi/in_depth/uk/2005/london_explosions/default.stm

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 06, 2005

2012 ஒலிம்பிக் லண்டனில் !


Trafalgar Square இல் மகிழ்சியை வெளிப்படுத்தும் மக்கள் - photo by BBC

2012 ஒலிம்பிக் போட்டியை எங்கு நடாத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக இன்று சிங்கப்பூரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் லண்டன் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்ததும் லண்டன் Trafalgar Square இல் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடி பாடியதை காணகூடியதாக இருந்தது.சிங்கையில் பிரிட்டிஷ் பிரதமர் - photo by BBC

ஆபிரிக்காவிற்கான வறுமை மீட்பு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை விவாதிக்கும் G8 நாடுகளின் மகாநாடு ஸ்கொட்லாண்டில் நடக்க இருக்கும் நிலையிலும் சிங்கை சென்ற பிரிட்டிஷ் பிரதமர் இந்த போட்டியில் லண்டன் வெற்றி பெற தன்னால் ஆனதை செய்தார். அது தவிர பிரிட்டிஷ் கால்பந்தாட்ட பிரபலம் டேவிட் பெக்கம் மற்றும் பிரிட்டிஷ் இளவரசி அனா உள்ளிட்ட பலரும் சிங்கை சென்றிருந்தனர். இந்த வார ஆரம்பத்தில் பிரிட்டிஷ் உணவு குறித்து பிரஞ்சு தலைவர் சிராக்கின் மோசமான விமர்சனத்தால் ஆத்திரமுற்றிருந்த பிரிட்டிஷ் மீடியாவுக்கும் மக்களுக்கும் லண்டன் பாரீசை வீழ்த்தி வெற்றி பெற்ற செய்தி மன ஆறுதலை அளித்தது.சிங்கை ராபிள் சிட்டியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் - photo by BBC


ஒரு பல்லின கலாச்சார நகரமாக இருப்பதே 2012 ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் வாய்ப்பு லண்டன் நகருக்கு கிடைத்தமைக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Unity in Diversity

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 05, 2005

2012 ஒலிம்பிக் போட்டி எங்கே?
2012ம் ஆண்டுக்குரிய சர்வதேச ஒலிம்பிக் போட்டியை நடாத்த Madrid, London, New York, Paris மற்றும் Moscow ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. இவற்றில் கடும் போட்டி பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளிடையே இருப்பதாகவும் தற்போதைய நிலவரப்படி பாரிஸ் நகரம் முன்ணணியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நாளை சிங்கப்பூர் நகரில் நடைபெறும் அனைத்துல ஒலிம்பிக் கமிட்டி (IOC) மகாநாட்டில் யார் இந்த போட்டியை நடாத்த போகின்றார்கள் என்பது தீர்மானிக்கப்படும்.


டேவிட் பெக்கம் மற்றும் டொனி பிளேயர் சிங்கப்பூரில் - photo by BBC News

இந்த ஒலிம்பிக் போட்டியில் லண்டன் நகரத்திற்கு ஆதரவளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரபலங்கள் பலர் சிங்கப்பூர் சென்றுள்ளனர். அண்மையில் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் டொனி பிளேயர் (Tony Blair) அங்கிருந்து 2012 ஒலிம்பிக் போட்டியை லண்டனில் நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை முழுமூச்சாக செய்து வருகின்றார். இவருடைய முயற்சி பலிக்குமா என்பது நாளை தெரியவரும்.

இந்த ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் வாய்ப்பு பல இன கலாச்சாரத்தை கொண்டுள்ள பிரித்தானியவாவிற்கு கிடைத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை அடையலாம். இதனை ஆதரிக்க விரும்புவோர் கீழுள்ள இணைய தளத்திற்கு சென்று தமது ஆதரவை பதிவு செய்யலாம், அது மட்டுமன்றி உங்கள் கைதொலைபேசியிலிருந்து London என்று 82012 எனும் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் ஆதரவளிக்கலாம்.

http://www.london2012.org/en/support/register/இந்த போட்டியை லண்டனில் நடாத்துவதற்கு முன்னைய தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியை பல இன கலாச்சார மக்கள் வாழும் லண்டனை விட பொருத்தமான ஒரு இடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

"There is no city like London. It is a wonderfully diverse and open city providing a home to hundreds of different nationalities from all over the world. I can't think of a better place than London to hold an event that unites the world. " - Nelson Mandela

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, April 25, 2005

விஸா திருமணங்கள் - 1

பிரிட்டனில் தற்போது விஸாவுக்கான திருமணங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகின்றது. பிரிட்டனில் நிரந்தர வதிவிட உரிமை இன்றி இருப்போருக்கும் பிற நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வந்து குடியேற விரும்புவோருக்கும் உள்ள குறுக்கு வழிகளில் ஒன்று பிரித்தானிய பிரஜை(அல்லது ஐரோப்பிய ஒன்றிய பிரஜை) ஒருவரை திருமணம் செய்வதாகும். பிரித்தானிய குடிவரவு சட்டங்கள் கடுமையாக்கபட்ட நிலையில் விஸா இல்லாத நிலையில் இங்கு தங்கியிருக்கும் பலர் இந்த வழியை நாடுகின்றார்கள். இவ்வாறு விஸா திருமணம் (Marriage of convinience) செய்து பலர் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லும் போதிலும் இதில் சில மோசடி திருமணங்களும் நடக்கத்தான் செய்கின்றன. நளதமயந்தி படத்தில் கூட மாதவன் அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பதற்காக அவுஸ்ரேலிய தமிழ் பெண்ணை திருமணம் செய்வார். அது பின்னர் குடிவரவு அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு அவர் நாடுகடத்தப்பட்டது வேறு கதை.


Jaswinder Gill (வயது 42 west London ) - photo by BBC News

அண்மையில் பிரித்தானிய பொலீசார் இது போன்ற மோசடி திருமணம் செய்யும் கும்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். Jaswinder Gill (வயது 42 west London) என்பவரும் அவருடைய கணவரும் வேறு சிலரும் சேர்ந்து போலி திருமணங்களை நடாத்தி இந்தியாவிலிருந்து பலரை பிரித்தானியாவிற்கு கொண்டுவந்துள்ளார்கள், இதன் மூலம் அவர் 1 மில்லியன் பவுண்ஸ் சம்பாதித்துள்ளார். தற்போது பொலீசாரார் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவருக்கு 10 வருட ஜெயில் தண்டனையும் இவருடைய கணவருக்கு 6 வருட ஜெயில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

படம் மற்றும் தகவல் நன்றி - BBC News

முழுமையான செய்தியை பிபிசி இணையதளத்தில் படிக்கலாம். இணைப்பு இதோ http://news.bbc.co.uk/1/hi/england/london/4481725.stm

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, April 17, 2005

விஸாவுக்கு என்ன வழியடா

வாடா மச்சான் லண்டன் வந்திட்ட சிடியில் இருந்து இன்னொரு பாடலை தருகின்றேன். முதல் பாடலை போல் இது சிரிப்பை வரவழைக்கவில்லை, பல புலம் பெயர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள வலிகளை கண்கூடாக பார்த்திருக்கின்றேன் அவற்றில் சிலதை சொல்கின்றது. மக்கள் என் பக்கம் படத்தில் உள்ள ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கும் ஊத்தனும் இசையில் இந்த பாடல் இருக்கின்றது. பாடல் வரிகள் இதோ ...

இந்த பாடல் சொலிசிற்றர பார்க்கணும் அவனுக்கு ஊத்தணும் அப்ப நான் கேள்வி கேக்கணும்
சொலிசிற்றர் விஸாவுக்கு என்ன வழியடா? ஓ இங்கிருக்க என்ன வழியடா?

ஊரில அகதி நான் ஆறு வயசுல வெளிநாட்டுல் அகதி பதினாறு வயசுல அன்னியனுக்கு அடிமை நான் சின்ன வயசுல கஷ்டத்துக்கு அடிமை நான் இந்த வயசுல தமிழினமாய் பிறந்துவிட்டால் தாய் தந்தையை பிரிந்துவிட்டால்
அந்த பாசம் அன்பு கூட சில யாசகமானதா

தாய் தந்தையை பார்க்க ஒரு யோகம் இல்லையே
வீடு வாசல் இருந்தும் அட நேரம் இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு பிரீடம் இல்லையே
சொல்லியழ எனக்கு இங்கு யாரும் இல்லையே

சொல்லினவலி எனக்கு இல்ல சொல்லி முடிக்க நேரம் இல்ல
அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்க்வில்லையே

பாடலை இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

http://www.tamilamutham.net/audio/Visa.rm

மீண்டும் நன்றி - சோழியன் அண்ணா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?